ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தை ஒக்டோபர் முதலாம் திகதி சைனா மேர்சன்ட் நிறுவனத்திடம் ஒப்படைக்கவுள்ளதாக அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சைனா மேர்சன்ட் நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்கும் ஒப்பந்தம் சில வாரங்களுக்கு முன்னர் கைச்சாத்திடப்பட்டது.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் 80 சதவீதப் பங்குகள் சைனா மேர்சன்ட் நிறுவனத்துக்கும் 20 சதவீதப் பங்குகள் இலங்கை துறைமுக அதிகாரசபைக்கும் உரித்தாகும் வகையில் 99 வருட குத்தகைக்கு சைனா மேர்சன்ட் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் இலங்கை அரசுக்கு 1.2 பில்லியன் ரூபா கிடைக்கும். எனவும் தெரிவிக்கப்படுகிறது.

0 comments:
Post a Comment