இறக்காமம் மாணிக்கமடு மாயக்கல்லி பிரதேசத்தில், பௌத்தர்கள் நேற்று (02) துப்பரவு பணிகளை மேற்கொண்டு சட்டவிரோதமாக தங்குமிடங்களை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்ட போது பதற்ற நிலை ஏற்பட்டது.
சில பௌத்த மத குருமார்களும் பௌத்த மக்களும் இணைந்து, தமிழ் நபரிடம் இருந்து காணியொன்றைக் கொள்வனவு செய்து துப்பரவு பணிகளை மேற்கொண்டதாலும் தங்குமிடங்களை அமைப்பதற்கான நடவடிக்கைகளை சட்ட விரோதமாக மேற்கொண்டுள்ளனர். இதனாலே அங்கு பதற்ற நிலை தோன்றியது.
குறித்தச் சம்பவத்தை ஆராய்வதற்காக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் ஆகியோர் அங்கு விஜயம் மேற்கொண்டு, குறித்த மத அமைப்பின் பிரதிநிதிகளுடனும் பாதுகாப்பு படையினருடனும் கலந்துரையாடல்களை மேற்கொண்டு அங்கு நடைபெறவிருந்த வேலைத்திட்டங்களைத் தடை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
அதனைத் தொடந்து, குறித்த பதற்ற நிலை அமைதியான நிலைக்கு திரும்பியதுடன் இது தொடர்பான விரிவான ஆராய்வுகளும் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படுவதுடன், அங்கு பௌத்த நபர்களால் மேற்கொள்ளவிருந்த செயற்பாடுகள் அனைத்தும் நிறுத்தப்பட்டது.

0 comments:
Post a Comment