பிரதான குழாய் வெடிப்பு காரணமாக பல இடங்களில் நீர் விநியோகம் தடைசெய்யப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
இந்நிலையில் மஹரகம, பொரலஸ்கமுவ, கொட்டாவை, பன்னிபிட்டிய, பெலென்வத்த, மத்தேகொட, மீபே, ஹோமாகம, பாதுக்க மற்றும் ருக்மல்கம பகுதிகளில் குறித்த நீர் விநியோக தடை அமுல் படுத்தப்பட்டுள்ளது.
மேலதிக தகவல் தெரிந்துகொள்ள 1939 என்ற அவசர இலக்கத்தை அழைக்குமாறு கோரப்பட்டுள்ளது.
கலடுவாவ நீர்தேக்கத்தில் இருந்து செல்லப்படும் பிரதான நீர் குழாய் பாதுக்க பிரதேசத்தில் வெடிப்புக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment