பிரதான செய்திகள்

தக்க தருணத்தில் உங்களுடைய முயற்சி இன்றியமையாதது: ஏ.எல்.எம்.அதாஉல்லா

''கிழக்கு நமதே'' என் உடன்பிறப்புகளுக்கு வரலாற்று வாழ்த்துக்களும் நன்றிகளும்

20ஆவது திருத்த சட்டத்தைக் கொண்டு வருவதன் ஊடாக கிழக்கு மாகாணத்தில் ஆயுட் காலத்தை நீட்டுவதற்கும் வடக்கோடு கிழக்கை இணைப்பதற்கும் இருக்கின்ற தொடர்பு சம்பந்தமாக தமிழ் பேசுகின்ற அனைத்து மக்களும் புரியக்கூடிய வகையில் -அதற்கென்றே போடப்பட்ட சம்மாந்துறை மேடையின் ஊடாக காத்திரமாக பங்களிப்பின் மூலம் உரையாற்றக்கிடைத்தது. அல்ஹம்துலில்லாஹ்.

அதனைத் தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் (TNA) ஊடகப் பேச்சாளரான சுமந்திரன் என்னுடைய கூற்றினை ஒப்புக்கொண்டு, சமஷ்டி தொடர்பான விடயங்களையும் வடக்கு கிழக்கு இணைக்கின்ற நிபந்தனைகள் போன்றவற்றை முன்வைத்தே 20ஆவது திருத்தத்திற்கு வாக்களித்ததை ஒப்புக்கொண்டிருந்தார்.

இதன் பின்னர் நாட்டில் வாழும் அனைத்து மக்களும் அரசியல் தலைவர்களும் புரிந்து கொள்ளக்கூடியவாறு 13.09.2017 அன்று இது தொடர்பாக என்னுடையதும் கிழக்கு மக்களினுடையதும் விசணத்தை தெரிவிப்பதற்காக ஊடகவியலாளர் மாநாடு ஒன்றை அவசரமாக கூட்டியிருந்தேன். கைமேல் பலனாக நமது மக்கள் உண்மையினைப் புரிந்து விழித்துவிட்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்.

கிழக்கு வடக்கோடு இணைக்கப்படும் அல்லது முயற்சிக்கப்படுகிறது என்றவாறான பேச்சுக்களைக் கேட்கின்ற பொழுது கிழக்கில் வாழும் தமிழர்களும் முஸ்லிம்களும் மீண்டுமொருமுறை தாங்கள் அனுபவித்த வரலாற்றுத் துன்பங்களை நினைவூட்டியவர்களாக இது தொடர்பாக கருத்து வெளியிடும் ஈனத்தனமானவர்களை வெறுத்தொதுக்கும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது.

பல இயக்கங்களும் ஊடகங்களும் காத்திரமான தங்களுடைய பங்களிப்புகளை அளிக்க, அவை கண்டு நிம்மதிப் பெருமூச்சு உருவெடுத்தது. குறிப்பாக,சமூகத்தை விழிப்பூட்டுவதற்கும் அறிவுறுத்துவதற்குமான சமூகப்பணியில் "கிழக்கு நமதே" உடன்பிறப்புகள் வரலாற்றில் பேசப்படட்டும்.

கிழக்கின் என் மக்கள் இன,குல பாகுபாடுகளுக்கப்பாலும்,அரசியல் வேறுபாடுகளை மறந்தும் ஒன்றிணைந்து இவர்களுடைய முயற்சிக்கு பேராதரவு வழங்க வேண்டும்.

ஏ.எல்.எம்.அதாஉல்லா
தலைவர் தேசிய காங்கிரஸ்
 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment