(றியாஸ் ஆதம்)
கிழக்கு மாகாண மட்ட விளையாட்டுப் போட்டியில் அம்பாறை மாவட்டம் முதலாமிடத்தினைப் பெற்று மாகாண சாம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டது.
கிழக்கு மாகாண விளையாட்டுப்போட்டி (6) புதன்கிழமை கந்தளாய் விளையாட்டரங்கில் ஆரம்பமானது. கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு விளையாட்டு போட்டியினை அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.
இவ்விளையாட்டுப் போட்டிகள் கிழக்கு மாகாண விளையாட்டுத்துறைப்பணிப்பாளர் என். மதிவண்ணன் தலைமையில் நடைபெற்றது. இதன் இறுதி நாள் (7) நிகழ்வின் போது ஆளுநரின் செயலாளர் அசங்க அபேவர்த்தன பிரதம அதிதியாக கலந்துகொண்டு பரிசுகளையும் கேடயங்களையும் வழங்கிவைத்தார்.
2017ஆம் அண்டுக்கான மாகாண மட்ட போட்டிகளில் அம்பாறை மாவட்டம் முதலிடத்தையும், இரண்டாம் இடத்தை திருகோணமலை மாவட்டமும், மூன்றாம் இடத்தை மட்டக்களப்பு மாவட்டமும் சுவீகரித்துக்கொண்டன. வடக்கு, கிழக்கு பிரிந்த பிற்பாடு அம்பாறை மாவட்டம் 9வருடங்களின் பின்னர் பெற்ற முதல் வெற்றி இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
முதலிடம் பெற்ற அம்பாறை மாவட்டத்திற்கான சாம்பியன் கிண்ணத்தை அம்பாறை மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வேலுப்பிள்ளை ஈஸ்வரனிடம் ஆளுநரின் செயலாளர் அசங்க அபேவர்த்தன வழங்கிவைத்தார்.

0 comments:
Post a Comment