(எஸ்.அஷ்ரப்கான்)
கல்முனை விக்டோறியஸ் விளையாட்டுக் கழகம் நாடாத்திய டெமார்க் சவால் கிண்ணம்-2017 சுற்றுப் போட்டியில் கல்முனை விக்டோரியஸ் விளையாட்டுக் கழகம் மழை குறுக்கிட்டதால் டெமார்க் சவால் கிண்ணம்-2017 சுற்றுப்போட்டி விதியின் பிரகாரம் வெற்றி தீர்மானிக்கப்பட்டு 4 ஓட்டங்களால் வெற்றிபெற்று வெற்றிக் கிண்ணத்தைத் சுவிகரித்தது.
இச்சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டி (8) வெள்ளிக்கிழமை கல்முனை சந்தாங்கேணி பொது விளையாட்டு மைதானத்தில் விக்டோறியஸ் விளையாட்டுக் கழகத் தலைவர் முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினர் பெஷ்டர் ஏ.எம்.றியாஸ் தலைமையில் நடைபெற்றது.
கல்முனை விக்டோறியஸ் விளையாட்டுக் கழகம் மற்றும் சாய்ந்தமருது பிளைங்கோர்ஸ் விளையாட்டுக் கழகம் என்பன பலப் பரீட்சை செய்த இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சாய்ந்தமருது பிளைங் கோர்ஸ் விளையாட்டுக் கழகம் 30 ஒவர்கள் முடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 213 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
214 என்ற வெற்றி இலக்கைப்பெற களமிறங்கிய கல்முனை விக்டோறியஸ் விளையாட்டுக் கழகம் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருக்கையில் 15.5 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 128 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மழை குறுக்கீடு செய்தமையால் போட்டி இடை நிறுத்தப்பட்டது.
ஆனால் தெடர்ந்தும் மழை பெய்து கொண்டிருந்தமையால் போட்டியைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டது. இதன் அடிப்படையில் நடுவர்களின் இறுதி முடிவின்படி 4 ஓட்டங்களால் கல்முனை விக்டோரியஸ் விளையாட்டுக் கழகம் வெற்றிபெற்றது.
போட்டியின் சிறப்பாட்டக்காரராக கல்முனை விக்டோறியஸ் விளையாட்டுக் கழகத்தின் சார்பில் துடுப்பாட்டத்தில் 58 ஓட்டங்களைப் பெற்ற நபீட் தெரிவாகிய அதே வேளை இச் சுற்றுப் போட்டியில் மொத்தமாக 148 ஓட்டங்களையும் 8 விக்கட்டுக்களையும் கைப்பற்றியதுடன் இத்தொடரில் 3 தடவைகள் ஆட்ட நாயகன் விருது பெற்ற கல்முனை விக்டோறியஸ் விளையாட்டுக் கழகத்தின் தணு தொடர் ஆட்ட நாயகன் விருதினை பெற்றுக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
இவ்விறுதிப் போட்டி நிகழ்விற்கு கல்முனை மாநகர சபையின் முன்னாள் முதல்வரும் லங்கா அசோக் லேலன்ட் நிறுவணத்தின் தலைவருமான கலாநிதி சிறாஸ் மீராசாஹிப், “எலிப்ஸ்’ நிறுவணத்தின் பொறியியளாளர் கே.எல்.எம். றமீஸ், மட்டக்களப்பு மாவட்ட போக்கு வரத்து பரிசோதகர் ஏ.எல்.எம். பாறூக் மற்றும் ‘லாறா’ நிறுவணத்தின் தவிசாளர் கே. சிவா ஆகியோர்கள் அதிதிகளாக கலந்து கொண்டு வெற்றிபெற்ற அணியினருக்கான வெற்றிக்கிண்ணம் மற்றும் பரிசில்களை வழங்கிவைத்தனர்.

0 comments:
Post a Comment