சீனாவில் உள்ள ஒரு பூங்காவில் வாழ்ந்து வந்த உலகின் மிக வயதான பாண்டா கரடி மரணமடைந்துள்ளதாக பூங்கா நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
பாண்டா கரடியானது சீனாவில் மிக பாதுகாக்கப்பட்ட உயிரினமாக கருதப்படுகிறது. இவ்விலங்குகளை துன்புறுத்தவோ, வேட்டையாடவோ அங்கு தடை உள்ளது. அந்நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள புஷோவு மாகாணத்தில் உள்ள ஒரு உயிரியல் பூங்காவில் உலகின் மிக வயதான பாண்டா கரடி வாழ்ந்து வந்தது.
பாசி என பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டு வந்த அந்த பாண்டா கரடியானது திடீரென நேற்று உயிரிழந்துள்ளது. 37 வயதான பெண் பாண்டா கரடி, பாசி என்ற பள்ளத்தாக்கில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதால் அப்பெயர் வைக்கப்பட்டதாக பூங்கா ஊழியர்கள் கூறினர்.
37 ஆண்டுகளாக புூங்காவில் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்திய பாண்டா கரடி திடீரென மரணமடைந்ததால் பூங்கா ஊழியர்கள் மனம் உடைந்து போயுள்ளனர்.

0 comments:
Post a Comment