திருத்தங்களுடன் 20வது திருத்தம் சமர்ப்பிக்கப்பட்டால் அதனை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுமென வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண சபையில் 20வது திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், வடமாகாண சபையின் நிலைப்பாடுகள் தொடர்பில் பத்திரிகையாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கன்டவாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்...
20 வது திருத்தச் சட்டம் தொடர்பாக எந்தவித திருத்தங்களும் வரவில்லை. அதில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டால், முறையாக பரிசீலித்து சரியான முடிவுக்கு வருவோம். இதுவரையில் திருத்தங்கள் செய்யப்பட்டு எமக்கு அனுப்பிவைக்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
அண்மையில், கிழக்கு மாகாண சபையில் 20வது திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு தமக்கு ஏதோ ஒரு வகையில் தெரிவிக்கப்பட்டதாக கிழக்கு மாகாண சபையினர் தெரிவிக்கின்றனர்.
அவர்களுக்கு தெளிவின்மையினால் தமது ஆதரவை தெரிவித்திருக்கக்கூடும். அதைப்பற்றி எமக்கு சரியாகத் தெரியாது. தற்போது இருக்கும் நிலையில், எமக்குத் தரப்பட்டது முன்னைய ஆவணம் மட்டுமே புதிய ஆவணம் திருத்தங்களுடன் வந்தால், கட்டாயம் பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

0 comments:
Post a Comment