பிரதான செய்திகள்

எனக்குச் சொந்தமான மரங்களை என்னால் வெட்ட முடியாத சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன்

நான் வளர்த்த மரங்களை வெட்டுவதற்கு எனக்கே அதிகாரம் உண்டு. இதன் மூலமாக எனது 5 பிள்ளைகளுடைய கல்வி மற்றும் பொருளாதாரத்தை முன்னெடுக்க வேண்டும். 

அரசாங்கம் நான் வளர்த்த மரங்களை வெட்டுவதற்கு இடமளியேன் எனக் கோரி வட்டகொட, மடக்கும்புர - வேவஹென்ன கிராமவாசியான எம்.ஜி.பந்தல பண்டார மரத்தில் கூடாரம் அமைத்து இன்று (13) உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார்.

தனக்கு சொந்தமான காணியில் வளர்க்கப்பட்டுள்ள மரங்களை வெட்டுவதற்கு தாம் அனுமதிகளைப் பெற்றிருந்த வேளையில், அதனை அரச சொத்தாக அபகரிக்கத் திட்டம் தீட்டுகின்றனர். 

இந்த மரங்களை வளர்த்ததால் அதனை வெட்டும் தருவாயில் எனது குடும்பத்தின் வருமானத்தை அதிகரித்துக்கொள்ள முடியும்.

இதற்கென 2016.10.18ஆம் திகதி அரசாங்க செயலக பிரிவில் அனுமதிகளும் பெறப்பட்டுள்ளது. இந்த அனுமதியை பெறுவதற்காக 12 – 15 ஆயிரம் ரூபாய் வரையிலான தொகையும் அரசாங்கத்துக்குச் செலுத்தப்பட்டுள்ளது. 

இருந்தும் எனக்குச் சொந்தமான மரங்களை என்னால் வெட்ட முடியாத சூழ்நிலைக்குத் தள்ளிவிடப்பட்டுள்ளேன். ஆகையால், இது தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்துக்கும் கொண்டு வருகின்றேன் எனத் தெரிவித்தார்.
 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment