(ஹஸ்பர் ஏ ஹலீம்)
தெஹிவளை பிரதேச செயலகத்தின் 2017ஆம் ஆண்டுக்கான பிரதேச இலக்கிய விழா நேற்று (12) ஜெயசின்ஹ கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
கலையும், இலக்கியமும். சாந்தமும், ஒழுக்கமும் நிறைந்த முழுமையான சிறந்த மனிதர்களைக் கொண்ட தேசத்தை கட்டியெழுப்புவோம் எனும் தொனிப்பொருளின் கீழ் நடைபெற்ற நிகழ்வில் கலை இலக்கியம் மற்றும் சமூக சேவையில் ஈடுபட்டுவரும் ஐவருக்கு தெஹிவளை பிரதேச செயலகத்தினால் கௌரவம் வழங்கப்பட்டது.
குறித்த கௌரவிப்பு நிகழ்வில் பன்முக ஆளுமை கொண்ட பத்திரிகை ஆசிரியர் என்.எம் அமீன் தெஹிவளை பிரதேச செயலகத்தினால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
தெஹிவளை பிரதேச செயலாளர் நளினி பாலசுப்ரமணியம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கொழும்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுனில் கன்னங்கர கலந்துகொண்டதுடன் இலக்கியவாதிகள், பாடசாலை மாணவர்கள் தெஹிவளை பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

0 comments:
Post a Comment