பிரதான செய்திகள்

"மரம் வளர்த்த மண்" அபிவிருத்தி திட்டத்தின் கீழ், அக்கரைப்பற்று பொது விளையாட்டு மைதானம் அபிவிருத்தி

கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல். தவமின் ஏற்பாட்டில் "மரம் வளர்த்த மண்" அபிவிருத்தி திட்டத்தின் கீழ், அக்கரைப்பற்று பொது விளையாட்டு மைதான அபிவிருத்தி வேலைத்திட்டம் இன்று (15) ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீமினால் திறந்துவைக்கப்பட்டது. அத்துடன் அக்கரைப்பற்று அதாஉல்லா விளையாட்டு மைதானத்தின் சுற்றுமதிலும் இன்று திறந்துவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட், சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசிம், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நஸீர், கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சீ. தண்டாயுதபானி, கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான ஆரிப் சம்சுதீன், ஐ.எல்.எம். மாஹிர் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment