20வது திருத்தச்சட்டமூலம் கிழக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட போது இடம்பெற்ற அமளிதுமளி தொடர்பில் ஸ்ரீ.ல.மு.காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றதாகவும், இதன்போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சுபையிர் இச்சட்டமூலத்திற்கு எதிராக குழப்பம் விளைவித்ததாகவும் ஹக்கீம் ஜனாதிபதியிடம் முறையிட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இது முஸ்லிம் சமூகத்தையே காட்டிக்கொடுக்கும் செயற்பாடாகவே பார்க்க வேண்டியுள்ளது.
கடந்த 11ஆம் திகதி நடைபெற்ற கிழக்கு மாகாண சபை அமர்வின் போது 20வது அரசியலமைப்பு திருத்தச்சட்டமூலம் சமர்ப்பிக்கப்படும் என தவிசாளரினால் அறிவிக்கப்பட்டது. இதேவேளை அன்றைய தினம் சபை அமர்வின் போது முதலமைச்சர் 20வது திருத்தச் சட்டமூலத்தினை சமர்ப்பிக்காது திருத்தத்தினையே வாசித்தார். இதன்போது எழுந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.சுபையிர் முதலில் 20வது திருத்தச் சட்டமூலத்தை சபையில் சமர்ப்பியுங்கள் இந்த சபையினை தவிசாளர் பிழையாக வழிநடாத்த வேண்டாம் எனவும் உரத்த தொனியில் தெரிவித்தார்.
இந்தவேளையில் எப்படியோ மாகாண சபையின் சம்பிரதாயங்களுக்கு முரனாகயாவது இந்த சட்டமூலத்தினை நிறைவேற்றியாக வேண்டும் என்பதற்காக தவிசாளர் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் முறையீடுகளை கருத்திற்கொள்ளாது செயற்பட்டதனால் அன்றைய தினம் கிழக்கு மாகாண சபையில் அமளிதுமளி ஏற்பட்டது.
கிழக்கு மாகாண சபையில் 20வது திருத்தச் சட்டமூலத்தை எதிர்க்கட்சியினரால் தோற்கடிக்கவோ அல்லது அதனை நிறைவேற்றாமல் தடுப்பதற்கோ போதிய பலமில்லை இருக்கவில்லை. இந்த விடயத்தில் எதிர்க்கட்சியினர் மாகாண சபைகளின் அதிகாரங்களை பாரளுமன்றத்துக்கு தாரைவார்க்க முடியாது எனவும் சில திருத்தங்களை மேற்கொண்டு சட்டமூலத்தை சமர்ப்பியுங்கள் எனவுமே கோரிக்கை விடுத்தனர்.
நிலைமை இவ்வாறிருக்க மாகாண சபையில் குறித்த சட்டமூலம் உத்தியோகபூர்வமாக திருத்தப்படாது சமர்ப்பிப்பதற்கும், அச்சட்டமூலத்தினை மாகாண சபையின் நிலையியல் கட்டளைச் சட்டத்திற்கு முரணாகவும் முதலமைச்சர் சமர்ப்பிக்க முற்பட்ட போது அதுதொடர்பில் சமூகத்தின் நலன் கருதி எதிர்ப்பினை வெளியிட்ட மாகாண சபை உறுப்பினர் சுபையிரை ஜனாதிபதியிடம் காட்டிக்கொடித்திருப்பது பெரும் வராற்று துரோகமாகவே பார்க்க வேண்டியுள்ளது.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.சுபையிர் ஜனாதிபதி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பிலே இருந்துகொண்டு குறித்த 20வது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக வாக்களித்திருப்பது. அவருடைய துணிவினையும், சமூகப்பற்றினையும் வெளிப்படுத்திருக்கிறது. புதவி மற்றும் சலுகைகளுக்காக சுபையிர் துணைபோயிருந்தால் கிழக்கு மாகாண சபையிலே அவர் நடுநிலை வகித்திருக்க முடியும் மாறாக அவர் இவ் ஆபத்தான சட்டமூத்தினை எதிர்த்திருப்பது பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.
கிழக்கு மாகாண சபையினர் போதிய விளக்கமின்மையினாலே 20வது திருத்தச் சட்டமூலத்தை ஆதரித்திருக்கக்கூடுமென வட மாகாண முதலமைச்சர் சற்று நக்கலாக கூறியிருக்கிறார். 20வது திருச்சட்ட மூலத்தின் திருத்தப்பட்ட புதிய ஆவணம் உத்தியோகபூர்வமாக தமக்கு தரப்படவில்லை என்றும் திருத்திய ஆவணம் வழங்கப்படும் பட்சத்தில் அதுதொடர்பில் ஆராயப்படும் எனவும் அவர் பகிரங்கமாக தெரிவித்துள்ளார். இவ்வாறான தெளிவான சிந்தனையோடு பயணிக்கின்ற தலைமைகளிடம் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் நிறையவே பாடம் கற்கவேண்டியுள்ளது.
குறித்த 20வது திருத்தச் சட்டமூலத்தினை கிழக்கு மாகாண சபையில் சமர்ப்பிப்பதற்கும், அதற்கு ஆதரவு தெரிவிப்பதற்கும் கிழக்கு மாகாண சபையில் இருக்கின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டனர். இந்த சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு அவர்கள் அரசாங்கத்திடம் பல நிபந்தனைகளை முன்வைத்து கடைசி நேரத்தில் அதனை ஆதரித்தனர். இதில் குறிப்பாக வட,கிழக்கு இணைப்பு, சமஷ்டி போன்ற விடயங்களுடன் இன்னும் பல அடங்குகின்றன. இந்த சந்தர்ப்பத்தில் ஸ்ரீ.ல.மு.காங்கிரஸ் எதுவித பேச்சுவார்த்தைகளையும் செய்யாது மாகாண சபை ஆட்சியுடன் நீடிக்கப்போகிறது என்கின்ற ஒரே காரணத்திற்காக அதுவும் ஒரு வருடம் முதலமைச்சர் பதவியை தக்கவைப்பதற்காகவே ஆதரவு வழங்கியுள்ளது.
குறிப்பாக திவிநெகும சட்டமூலம் மற்றும் உள்ளுராட்சி திருத்தச் சட்டமூலம், 18வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் உட்பட 20வது திருத்தச் சட்டமூலம் என்பற்றுக்கு ஆதரவளித்து முஸ்லிம் சமூகத்திற்கு வரலாற்று துரோகமிழைத்த ஸ்ரீ.மு.காங்கிரஸ் தலைவருக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சுபையிரை காட்டிக்கொடுப்பதென்பது ஒரு பெரிய விடயமல்ல.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சுபையிர் சமூக விடயங்களில் அக்கரைகொண்டு மாகாண சபையில் மிகத்தீவிரமாக செயற்படக்கூடிய ஒருவர். அதுமாத்திரமல்லாது கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் மலிந்து காணப்படுகின்ற போதைவஸ்துதப் பாவனையை ஒழிப்பதற்கும் அண்மைக்காலமாக அவர் காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இவ்வாறு சமூகம் சார்ந்த விடயங்களில் அக்கரையுடன் செயற்படுபவர்கள் அரசியல் நோக்கத்துதக்காக காட்டிக்கொடுக்கப்பட்டு பழிதீர்க்கப்படுவதுத கவலையான விடயமாகும்.
சுமூகத்திற்றகாக குரல் கொடுக்கின்றவர்கள் காட்டிக்கொடுக்கப்படுவதும், கள்வர்களும் சமூகத்தை காட்டிக்கொடுப்பவர்களும் பாதுகாக்கப்படுவதும் அண்மைக்காலம் தொட்டு முஸ்லிம் சமூகத்தில் அரங்கேற்றப்பட்டு வருகிறது. இது முஸ்லிம் சமூகத்திற்கு ஆரோக்கியமல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment