இஸ்லாமிய சகோதர மக்கள் அனைவருக்கும் தியாகத்தையும், பொறுமையினையும் பறைசாற்றும் இத்தியாகத் திருநாளில் சமூக ஒற்றுமை மேலோங்க அனைவரும் பிராத்திப்போம் என ஐக்கிய தேசியக் கட்சியின் அட்டாளைச்சேனை அமைப்பாளரும், லொயிட்ஸ் குருப் ஒப் கம்பனியின் முகாமைத்துவப் பணிப்பாளருமான யூ.கே.ஆதம் லெப்பை விடுத்துள்ள ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
இப்றாஹீம் நபி (ஸல்) அவர்களின் பெரும் தியாகத்தை நினைவூட்டும் ஹஜ்ஜூப் பெருநாள் எம்மத்தியிலும் தியாக உணர்வை ஏற்படுத்துவதோடு இஸ்லாம் காட்டிய பாதையில் பயனிப்பதற்கு ஆசையுடையவர்களாக நாம்அ னைவரும் மாற வேண்டும்.
இந்த இனிய பெருநாள் தினத்தில் எமது சமூகத்தவர்களுடனும், பிற சமூகத்தவர்களுடனும் ஒற்றுமையுடனும் வாழ்ந்து இன்ப, துன்பங்களில் பங்கெடுக்கும் உன்னத பணியை செய்ய முஸ்லிம் சமூகம் முன்வர வேண்டும் எனவும் பிரார்த்திக்கின்றேன்.

0 comments:
Post a Comment