நமது அன்றாட செயற்பாடுகள் அனைத்தையும் ஒற்றுமையோடும் உளத்தூய்மையோடும்,அல்லாஹ்வின் அருளுக்குரியதாகவும், தியாகத்துடனும் மேற்கொள்ளும் போதுதான் நல்லெண்ணத்தின் பேரிலான வெற்றியோ ஈடேற்றமோ எய்த முடியும். இதன் ஊடாகவேதான் நாட்டின் இன ஐக்கியத்தையும், சமாதானத்தையும் உருவாக்க முடியும். அவ்வாறு எமது நாட்டில் உருவாக்கப்படுகின்ற சமாதானத்திற்கும், ஐக்கியத்திற்கும் முஸ்லிம் மக்களாகிய எங்களது பங்கு பிரதானமானதாக இருக்க வேண்டும். என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.சுபையிர் தனது ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
தியாகத்தை அடிப்படையாகக் கொண்டதும், மகத்துவமிக்கதுமான இப் பெருநாளைக் கொண்டாடும் அனைத்து வாழ் முஸ்லிம் மக்களுக்கும் எனது மனப்பூர்வமான ஹஜ் பெருநாள் வாழ்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமிதம் அடைகின்றேன்.
எனவே இத்திருநாளில் இப்றாஹீம் (அலை) அவர்களின் தியாயகத்தை நெஞ்சில் நிறுத்தி நமது வாழ்க்கையினை தியாகமுடையதாகவும், ஈடேற்றமுடையதாகவும் மாற்றி ஒவ்வொருவரும் பயணிக்க வேண்டும். எம்மிடையே காணப்படும் இன, மத, வேற்றுமைகளைக் களைந்து பயன் தரும் வகையில் சமூக வாழ்வில் நம்மை இணைத்துக் கொண்டு நற்பேற்றினை அடைவோம்.
இதேவேளை போரினாலும், அனர்த்தங்களினாலும் பாதிக்கப்பட்டு இன்றும் பல இன்னல்களுக்கு மத்தியில் அகதி வாழ்வு நடத்துகின்ற நமது மக்களுக்கு நிம்மதியான வாழ்வு மலர்வதற்கும், உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் வாழும் எமது முஸ்லிம் சமூகம் சந்தோசமாகவும், நிம்மதியாகவும் இப்பெருநாள் தினத்தைக் கொண்டாடி மகிழ இப்புனிதத் திருநாளில் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
மலர்ந்திருக்கும் இந்த தியாகத் திருநாளில் பல்லின சமூகத்தில் வாழும் இலங்கை முஸ்லிம்களாகிய நாம் சகோதர சமூகத்திற்கு இடையூறுகள் ஏற்படாத வண்ணம் எம்முடைய கொண்டாட்டங்களை அமைத்துக்கொள்ள வேண்டும். எமது பெருநாள் கொண்டாட்டத்தில் ஏனைய சகோதர இன மக்களையும் இனைத்து சகோதர வாஞ்சையை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
மேலும் நபி (ஸல்) அவர்கள் காட்டிய அழகிய வழிமுறையில் இப்பொருநாள் தினத்தை நாம் அனைவரும் கொண்டாடி மகிழ்வோமாக என அவர் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 comments:
Post a Comment