பிரதான செய்திகள்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மக்கள் மனங்களிலிருந்து தூரமாகிறது:பொறியியலாளர் யூ.கே. நாபீர்

(அஷ்ரப்)

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் தொடர்பான விடயம் மற்றும் பிழையான நேரங்களில் பிழையான முடிவுகளை எடுப்பதன் மூலம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி அம்பாரை மாவட்ட மக்கள் மனங்களிலிருந்து துாரப் போகின்ற நிலை காணப்படுவாக நாபீர் பௌண்டேசன் அமைப்பின் தலைவரும் பொறியியலாளருமான யூ.கே. நாபீர் தெரிவித்துள்ளார்.

அகில் இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி தனது அரசியல் நகர்வுகள் தொடர்பாக அம்பாரை மாவட்ட மக்களிடம் கொடுக்கின்ற வாக்குறுதிகள் மற்றும் அரசியல் காய் நகர்த்தல்கள் தொடர்பாக கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்... 

அ.இ.ம.கா. கட்சியின் செயலாளராக செயற்பட்ட வை.எல்.எஸ். ஹமீட் ஒரு மாநாட்டின் மூலம் பதவி நீக்கப்பட்டதாக அறிவித்த நிலையில் புதிய செயலாளராக சுபைர்தீன் என்பவரை நியமித்து அக்கட்சி செயற்பாட்டில் இறங்கியது. ஆனால் வை.எல்.எஸ். இந்த செயலாளர் நாயகம் நியமனம் சட்ட விரோதமானது என்றும் இதற்கான தடையுத்தரவை வேண்டியும் நீதிமன்றம் சென்றார். 

இந்நிலையில் கடந்த 24 ஆம் திகதி இத்தடை உத்தரவுக் கோரிக்கை மாவட்ட நீதிமன்றத்தினால் வழங்கப்படுவதை மறுத்து வழக்கை தொடர்ந்து நடாத்த நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதேநேரம் இவ்வுத்தரவில் செயலாளராக யார் செயற்பட வேண்டும் என்று நீதிமன்றம் எதனையும் குறிப்பிடவில்லை. அது வழக்கு விசாரணை முடிவிலேயே தீர்மானிக்கப்படும். 

இந்நிலையில் வை.எல்.எஸ். ஹமீடினால் மேன்முறையீடு செய்துள்ளதாகவும், இந் நிலையில் சடுதியாக அ.இ.ம.கா. கட்சி சுபைர்தீனை செயலாளராக செயற்பட நீதிமன்றம் அனுமதி என்ற விடயம் பொய் என வை.எல்.எஸ். ஹமீட் மறுத்திருந்தார். 

இவ்வாறு அக்கட்சி செயற்படுவதனால் மக்கள் மத்தியில் செல்வாக்கினை இழந்து கொண்டுவருகின்றது. எனவே மக்கள் மனங்களில் பொய் அரசியல் வாக்குறுதிகளையும், பொய் மூட்டைகளையும் அவிழ்த்துவிட்டு மக்களைக் குழப்பாமல் துாய்மையான அரசியல் சித்தாந்தத்தை ஏற்படுத்த நாபீர் பௌண்டேசன் அழைப்பு விடுக்கின்றது என்றும் அவர் தெரிவித்தார். 
 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment