பிரதான செய்திகள்

கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் உதுமாலெப்பை விடுத்துள்ள ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி


உலகளாவிய ரீதியில் ஹஜ்ஜூப் பெருநாளைக் கொண்டாடும் அனைத்து இஸ்லாமியச் சகோதரர்களுக்கும் ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்ததுக்களைத் தெரிவிப்பதில் மட்டில்லா மகிழ்ச்சியடைகின்றேன்.

இஸ்லாமிய வரலாறு மிக நீண்டது. தியாகங்களாலும், இரத்தத்தாலும் கட்டியெழுப்பப்பட்ட இந்த மார்க்கம் வரலாறு நெடுகிலும் தியாகங்களினாலேயே வளர்க்கப்பட்டு இருக்கிறது. பொறுமையினையும் இணைந்து போதலையும் சொல்லித் தருகின்ற இஸ்லாம் வாழ்வின் நிலையாமை பற்றியும் கூறாமல் இல்லை.

இப்ராஹிம் (அலை) அவர்களின் மனிதத்துவத்திற்கு கட்டுப்பட முடியாத பல மடங்கு பெரிதான பொறுமையும், இஸ்மாயில்(அலை) அவர்களின் ஈடு இனையற்ற இணைந்து போதலும், அன்னை ஹாஜராவின் சோதனைக்குட்படுத்தப்பட்ட தாய்மை உணர்வும் நமக்கெல்லாம் படிப்பினைகள். துயரங்கள் என்பதும் இழப்புகள் என்பதும் நமக்கு பழகிப்போனவை. அதன் சாட்சியாளர்களாகவே ரோஹிங்கிய முஸ்லிம்கள் மாறிக் கொண்டு வருகின்றனர். முஸ்லிம்களின் கண்ணீர் ஒரு போதும் கௌரவம் இழந்து போவதில்லை. வேதனையோடு செய்யும் பிரார்த்தனை மீண்டும் பூமிக்கு திரும்புவதுமில்லை. அல்லாஹ் எல்லாவற்றிற்கும் போதுமானவன்.

அல்லாஹ_ அக்பர் அல்லாஹ_ அக்பர் என்ற தக்பீர் முழக்கம் நமக்கு இறைகட்டளை, வேதம், வாழ்வு மாற்றங்களுக்கான ஒரே வழி. அதுவே நிராகரிப்பாளர்களுக்கான சாப மணி. எனவே, இந்தத் தியாகத் திருநாள் புனித ஹஜ்ஜூப் பெருநாள் தினத்தில் மனைகள் தோறும் மகிழ்ச்சியோடும், கண்ணீரோடும் வாழும் எல்லா முஸ்லிம்களுக்கும் எனது ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும் உரித்தாகட்டும்.
 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment