உலகளாவிய முஸ்லிம் உம்மத்தின் நிம்மதியான வாழ்வுக்கு இப்புனிதத் திருநாளில் அனைவரும் பிரார்த்திப்போமாக என ஐக்கிய தேசிய கட்சியின் சம்மாந்துறை தொகுதி பிரதம அமைப்பாளர் எம்.ஏ.ஹசன் அலி விடுத்துள்ள ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
புனித ஹஜ்ஜூப் பெருநாளைக் கொண்டாடி மகிழும் அனைத்து முஸ்லிம் சகோதரர்களுக்கும் எனது உளம் கனிந்த ஹஜ்ஜூப் பெருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெரு மகிழ்ச்சியடைகின்றேன். (அல்ஹம்துலில்லாஹ்)
அல்லாஹ்வின் கட்டளைக்கு கட்டுப்பட்ட ஒரு குடும்பத்தின் மூன்று தியாகசீலர்களாம் அல்லாஹ்வின் தோழரான நபி இப்றாஹிம் (அலை), அவரின் துணைவியார் அன்னை ஹாஜரா, தவப்புதல்வன் நபி இஸ்மாயில் (அலை) ஆகியோரின் மாபெரும் தியாகம் நமக்கெல்லாம் படிப்பினையைத் தருவதோடு உலகம் அழியும் வரையும் இத்தியாகம் நினைவு கூறப்படவேண்டிய ஒரு முக்கிய விடயமாகும். அன்னாரின் தியாகத்திற்கான உயர்ந்த சன்மானமே ஹஜ்ஜூப் பெருநாளாகும். இந்நாளில் உலகளாவிய ரீதியில் வாழும் முஸ்லிம்கள் சந்தோசமாகவும், நிம்மதியாகவும் வாழ இறைவனிடம் பிரார்த்திக்கின்றேன்.
உலக முஸ்லிம்களின் ஒற்றுமையினை சீர்குலைத்து எமது சமுதாயத்தினை பிளவுபடுத்துவதற்கு முன்னெடுக்கப்படுகின்ற சதித்திட்டங்களை முறியடிப்பதற்கு நாம் நமக்குள் பிளவுகளை ஏற்படுத்திக் கொள்ளாமல் எமது வாழ்விலும் நிலையான விடிவு ஏற்பட புனிதமிக்க இந் நன்நாளில் நாம் அனைவரும் இரு கரமேந்தி பிரார்த்திப்போமாக. குறிப்பாக பல்லின மக்கள் வாழும் நமது நாட்டில் சகல இன மக்களுடனும் ஒற்றுமையாகவும், சந்தோசமாகவும் வாழ்வதற்கும் நாம் அனைவரும் பழகிக்கொள்வோமாக என அவர் தனது வாழ்த்துச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

0 comments:
Post a Comment