பிரதான செய்திகள்

சிறைச்­சா­லை­களில் கமரா பொருத்­து­வ­தற்கு நட­வ­டிக்­கை: அமைச்சர் சுவா­மி­நாதன்

சிறைச்­சா­லை­களில் கமரா வச­திகள் இல்லை. இதனால் இரண்டு மாதத்­திற்குள் அனைத்து சிறைச்­சா­லை­க­ளுக்கும் கமரா பொருத்­த­வுள்ளதாகவும், முதலில் வெலிக்­கடை சிறைச்­சா­லைக்கும் அதன் வைத்­தி­யசாலைக்கும் கமரா பொருத்துவதற்கு தீர்­மா­னித்­துள்­ள­தாக சிறைச்­சாலை மறு­சீ­ர­மைப்பு, புனர்­வாழ்வு மற்றும் இந்து மத விவ­கார அமைச்சர் டி.எம். சுவா­மி­நாதன் தெரி­வித்துள்ளார்.

அத்­துடன் கைதி­ ஒ­ருவர் ஒரு வைத்­தி­ய­சாலையில்யில் அனு­ம­திக்க வேண்­டு­மாயின் நான்கு வைத்­தி­யரின் சான்­றிதழ் பெற வேண்டும் என்­ப­தனை கட்­டாயம் செய்­ய­வுள்ளோம் என்றும் அவர் குறிப்­பிட்டார். சிறைச்­சாலை மறு­சீ­ர­மைப்பு, புனர்­வாழ்வு மற்றும் இந்து மத விவ­கார அமைச்சில் நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

தற்­போது சிறைக்கு செல்லும் அனை­வரும் வைத்­தி­ய­சா­லைக்கு செல்­வது வழக்­க­மாகி விட்­டது. இதற்கு முற்­றுப்­புள்ளி வைக்கும் முக­மாக கைதி­யொ­ருவரை வைத்­தி­ய­சாலையில் அனு­ம­திக்க வேண்­டு­மாயின் நான்கு வைத்­தி­யர்களின் சான்­றிதழ் பெற வேண்டும்.

தற்­போது உலகில் உள்ள சிறைச்­சா­லை­களின் தரத்தின் அடிப்­ப­டையில் பார்க்கும் போது இலங்கை சிறைச்­சாலை தர­மிக்­க­தாக உள்ளது. தற்போது இங்கு பாரியளவில் பிரச்சினைகள் கிடையாது. அத்துடன் வெலிக்கடை சிறைச்சாலையை ஹொரணைக்கு மாற்றுவதற்கான பணிகளை நாம் ஆரம்பித்துள்ளோம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 
 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment