பிரதான செய்திகள்

இரத்தினபுரியில் அடை மழை ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு

இரத்தினபுரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை, வெள்ளம், மண்சரிவு காரணமாக இதுவரை 1,911 குடும்பங்களை சேர்ந்த 7,590 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

இம் மாவட்டத்தில் இரத்தினபுரி, கிரியெல்ல, எஹலியகொடை, அயகம, எலபாத்த, குருவிட்ட, நிவித்திகல ஆகிய ஏழு பிரதேச செயலகப் பிரிவுகளிலேயே இவ்வாறு வெள்ளம் மற்றும் மண்சரிவு அபாயம் காரணமாக 1,911 குடும்பங்களை சோந்த 7,590 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இம் மாவட்டத்தில் வெள்ளம் மற்றும் மண்சரிவு அபாயத்தில் பாதிக்கப்பட்ட 196 குடும்பங்களை சேர்ந்த 721 பேர் 18 பொது இடங்களில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். இரத்தினபுரி பிரதேச செயலகப்பிரிவில் வெள்ளம் மற்றும் மண்சரிவில் 304 குடும்பங்களை சேர்ந்த 1,420 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மூன்று பொது இடங்களில் 22 குடும்பங்களை சேர்ந்த 88 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

கிரியெல்ல பிரதேச செயலகப்பிரிவில் 596 குடும்பங்களை சேர்ந்த 2,425 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மூன்று பொது இடங்களில் 11 குடும்பங்களை சேர்ந்த 48 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். எஹலியகொடை பிரதேச செயலகப்பிரிவில் 531 குடும்பங்களை சேர்ந்த 2,119 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஆறு பொது இடங்களில் 90 குடும்பங்களை சேர்ந்த 343 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

அயகம பிரதேச செயலகப்பிரிவில் 267 குடும்பங்களை சேர்ந்த 878 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் நான்கு பொது இடங்களில் 60 குடும்பங்களை சேர்ந்த 199 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். எலபாத்த பிரதேச செயலகப்பிரிவில் 165 குடும்பங்களை சேர்ந்த 555 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இரண்டு பொது இடங்களில் 13 குடும்பங்களை சேர்ந்த 43 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

நிவித்திகள பிரதேச செயலகப்பிரிவில் 7 குடும்பங்களை சேர்ந்த 31 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குருவிட்ட பிரதேச செயலகப்பிரிவில் 41 குடும்பங்களை சேர்ந்த 162 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேற்படி மாவட்டத்தில் நேற்று (8) இரத்தினபுரி, எஹலியகொடை, குருவிட்ட, அயகம, எலபாத்த ஆகிய ஐந்து பிரதேச செயலகப்பிரிவுகளுக்குட்பட்ட சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இரத்தினபுரி மாவட்டத்தில் சீரற்ற காலநிலை தொடருமாயின் இரத்தினபுரி, பெல்மதுளை, களவான, கிரியெல்ல. நிவித்திகல, குருவிட்ட, எஹலியகொட, அயகம, எலபாத்த ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் வாழும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இப்பகுதிகளில் மக்களின் இயல்புநிலை முற்றாக பாதிப்படைந்துள்ளது.

 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment