தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் சென்கிளயார் பகுதியில் நேற்று (8) இரவு முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி 80 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியது.
இம்முச்சக்கர வண்டியில் பயணம் செய்த மூன்று பேர் கடும்காயங்களுக்குள்ளாகி கொட்டகலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வட்டவளை பகுதியிலிருந்து தலவாக்கலை பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் காயமடைந்த மூவரில் ஒருவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாகவும், ஏனைய இருவரும் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
முன்னால் வந்த வாகனம் ஒன்றுக்கு இடமளிக்கும் போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும், இதன்போது மற்றுமொரு முச்சக்கரவண்டியொன்று தமக்கு உரிய பக்கத்திலிருந்து மாற்று பக்கத்தில் வந்ததனால் அந்த முச்சக்கரவண்டியில் மோதுண்டு இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments:
Post a Comment