புளூவேல் கேமை பகிர்ந்தால் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை தெரிவித்துள்ளது.
‘புளூவேல் கேம்’ விளையாடி மதுரையைச் சேர்ந்த மாணவன் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்த விபரீத விளையாட்டு பற்றி பல்வேறு தரப்பினரும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில்,புளூவேல் கேமை பகிர்ந்தால் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை தெரிவித்துள்ளது.
இந்த விவகாரத்தை தாமாக முன் வந்து விசாரித்த நீதிமன்றம், ”பகிரப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்” என்று டிஜிபி, உள்துறை செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளது.
எதிர்வரும் 7 ஆம் திகதிக்குள் மத்திய அரசிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையின் போது, ‘புளூவேல் கேம்’ முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாகவும், ஷேர் இட், பேஸ் புக் உள்ளிட்ட ஆப்ஸ் மூலமே ‘புளூவேல் கேம்’ பகிரப்படுகிறது என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

0 comments:
Post a Comment