மதுபோதையில் வாகனங்களைச் செலுத்தும் சாரதிகளைக் கண்டறிவதற்காக நாடளாவிய ரீதியில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு, 90,000 மூச்சுப் பகுப்பிகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில், போதையில் வாகனங்களைச் செலுத்தும் சாரதிகளைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கைகள், எதிர்வரும் நாட்களில் துரிதப்படுத்தப்படும் என்றும், அவர்களுக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல் செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, மதுபோதையில் வாகனம் செலுத்தியமை உறுதிப்படுத்தப்படுமாயின், அவருடைய சாரதி அனுமதிப்பத்திரத்துக்கு, சில காலங்களுக்கு தடைவிதிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.

0 comments:
Post a Comment