அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்டிருக்கும் 20ஆவது திருத்தச் சட்டத்தை வட மாகாண சபை நிராகரித்துள்ளது.
அதேநேரம் 20ஆவது திருத்தச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டால் அதனை குறித்த நேரத்தில் பரிசீலிப்பதென்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வட மாகாண சபையின் 105ஆவது அமர்வு இன்று (07) வட மாகாண சபையில் தவிசாளர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்றது.
இதன்போதுஇ அரசாங்கத்தால் புதிதாக கொண்டுவரப்பட்டிருக்கும் 20ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் விவாதம் எடுத்துக் கொள்ளப்பட்டபோதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுளன்ளதாக வட முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

0 comments:
Post a Comment