பாகிஸ்தான் கராச்சி விமான நிலையத்திற்கு வெளியே ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 2 பேர் உயிரிழந்ததுடன், 8 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நேற்று இரவு 11.00 மணியளவில் நடைபெற்றுள்ளது. விமான நிலையத்திற்கு வெளியே இருந்த டேங்கர் வெடித்ததாக அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில் உயிரிழந்த இருவரும் சீனர்கள் என்று தகவல்கள் கிடைத்துள்ளன. மேலும், இந்த சம்பவத்தை பயங்கரவாதத் தாக்குதல் என்று குறிப்பிட்டு தங்களது கண்டனத்தை சீன வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

0 comments:
Post a Comment