நீர்ப்பாசனத்துறை மற்றும் சமூக சேவைகள் என பல்வேறு பணிகளை மேற்கொண்டமைக்காக சம்மாந்துறையைச் சேர்ந்த பிரதம நீர்ப்பாசன பொறியியலாளரும், சமூக சேவையாளருமான எம்.எஸ்.எம்.நவாஸ் சிலோன் ஜேர்னலிஸ்ட் போரத்தினால் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டார்.
சிலோன் ஜேர்னலிஸ்ட்
போரத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த பாராட்டு நிகழ்வு அண்மையில் பாசிக்குடா சன்
ரே ஹோட்டலில் இடம்பெற்றது. போரத்தின் தலைவரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான எம்.எஸ்.எம்.ஜஃபர்
(ஜே.பி) தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்
சிரேஷ்ட ஊடகவியலாளர்கள், அறிவிப்பாளர்கள், எழுத்தாளர்கள் எனப்பலர் கலந்துகொண்டனர்.
சிலோன் ஜேர்னலிஸ்ட்
போரத்தின் அழைப்பின் பேரில் குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட கிழக்கு
மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.சுபைரினால் பொறியியலாளர் நவாஸ் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டமை
குறிப்பிடத்தக்கது.
பொறியியலாளர்
நவாஸின் கடந்தகால சேவைகள் குறித்து இந்நிகழ்வில் பலரும் பாராட்டி பேசியதுடன் வாழ்த்துக்களையும்
தெரிவித்துக்கொண்டனர்.






0 comments:
Post a Comment