(தஸ்தகீர்)
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் அவர்களும் பிராந்திய திட்டமிடல் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.சீ.எம்.மாஹிர் அவர்களும் இன்று (15) பொத்துவில் உல்லை வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்டனர்.
இதன்போது வைத்தியசாலைகளின் நிலைமைகளைப் பார்வையிட்ட பணிப்பாளர் அங்கு நிலவும் குறைபாடுகள் மற்றும் தேவைகள் குறித்தும் பொறுப்பு வைத்திய அதிகாரியிடம் கேட்டறிந்து கொண்டார்.
இதன்போது
வைத்தியசாலைக்கு மிக அவசியத் தேவையாக காணப்பட்ட தளபாடங்கள் சிலவற்றையும் கையளித்த
பணிப்பாளர், அவ்வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படவுள்ள புனர்நிர்மாண பணிகளை
துரிதப்படுத்துமாறும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளை பணித்துள்ளார்.
0 comments:
Post a Comment