(ஏ.எல்.எம்.ஷினாஸ்)
முன்னாள் உயர்
கல்விப் பிரதி
அமைச்சர் மர்ஹூம் மயோன்
முஸ்தபாவின் புதல்வர் றிஸ்லி
முஸ்தபா மேற்கொண்டு வரும் சமூக சேவைகளுக்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை (19) சிலோன் ஜேர்னலிஸ்ட் போரம் அவரைப் பாராட்டி கௌரவித்தது.
சிலோன்
ஜேர்னலிஸ்ட் போரத்தின் தலைவர்
எம்.எஸ்.எம்.ஜஃபர்
தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கருத்து தெரிவித்த றிஸ்லி
முஸ்தபா, ஊடகவியலாளர்கள் என்னைத் தேடிவந்து கௌரவிப்பு வழங்கியமை எனக்கு
மகிழ்ச்சியை தருகிறது.
ஊடகத்துறையையும் ஊடகவியலாளரையும் நாம் கௌரவத்தோடு மதிக்கின்றோம். மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கும் சந்தர்ப்பத்திலும் அனர்த்த நிலைமையிலும் அசாதாரண சூழலிலும் என ஊடகவியலாளர்கள் பல்வேறு சேவைகளை மக்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த ஊடகவியலாளர்களின் சேவை மெச்சத்தக்க ஒன்றாகும். எதிர்காலத்தில் எமது பிராந்திய ஊடகத்துறையில் நவீன தொழில்நுட்ப வசதியை உருவாக்க வேண்டும். இதன் மூலம் பிராந்திய ஊடகத்துறையும் ஊடகவியலாளர்களையும் முன்கொண்டு செல்ல வேண்டும் என்று தெரிவித்தார்.
முன்னாள் உயர்
கல்வி
பிரதி
அமைச்சர் மர்ஹூம் முஸ்தபா அவர்களின் மரணத்திற்கு பின்னர் அவருடைய புதல்வர் றிஸ்லி
முஸ்தபா அரசியல் கட்சியுடன் இணைந்து கல்முனை பிராந்தியத்தில் பல
அபிவிருத்தி பணிகளை
மேற்கொண்டார். கல்வி,
விளையாட்டு, பொருளாதாரம், கலை,
கலாசாரம் போன்ற
பல்வேறு துறைகளில் வறுமையான மக்களுக்கு பல்வேறு பங்களிப்புக்களை தொடர்ச்சியாக வழங்கி
வருகிறார்.
இவரது இந்த சமூக சேவையை ஊக்குவிக்கும் பொருட்டும், எதிர்காலத்தில் இன, மத, மொழிகளுக்கு அப்பால் சமூக நல்லிணக்கத்துடன் சேவையாற்றுவதற்கும், இளைஞர் சமூகத்தை வலுவுள்ள சமூகமாக மாற்றவும் றிஸ்லி முஸ்தபா போன்ற இளம் தலைவர்கள் பாராட்டப்பட வேண்டும் என்ற உன்னத நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு சிலோன் ஜேனலிஸ்ட் போராம் றிஸ்லி முஸ்தபாவிற்கு நினைவுச் சின்னம் வழங்கி பொன்னாடை போர்த்தி கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில், போரத்தின் உயர்
பீட
உறுப்பினர்கள், நிர்வாக உறுப்பினர்கள் என
பலரும்
கலந்து
கொண்டனர்.
0 comments:
Post a Comment