பிரதான செய்திகள்

பஹட் ஸமான் திடீர் மரண விசாரணை அதிகாரியாக நியமனம்

(.எல்.எம்.ஷினாஸ், றாசிக் நபாயிஸ்)

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவில் நிரந்தர திடீர் மரண விசாரணை அதிகாரியாக, மருதமுனை பிரதேசத்தை சேர்ந்த  பஹட் ஸமான் நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் அலுவலகத்தில் வைத்து அமைச்சர் விஜயதாச ராஜபக்சவிடமிருந்து இந்த நியமனத்தை (13) பெற்றுக் கொண்டார்


1979
இன் 15 ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கை முறை சட்டக்கோவை சட்டத்தின் 108ஆம் பிரிவின் மூலம் நீதி அமைச்சருக்கு உரித்தாக்கப்பட்டுள்ள தத்துவங்களின் பயனைக்கொண்டு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


சிறந்த சமூக சேவையாளரான பஹட் ஸமான், மருதமுனை அல்-மனார் தேசிய பாடசாலையின் பழைய மாணவரும் 4G ஹேன்ட் லூம் பிரைவேட்  லிமிடெட் நிறுவனத்தின் உரிமையாளரும் ஆவார்இவருக்கு 2024.05.15ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது
.

 

 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment