ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஏறாவூர் மத்திய குழுவின் பிரதித் தலைவர் எம்.எஸ்.ஏ.கபூர்தீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்டத் தலைவருமான எம்.எஸ்.சுபைர் கலந்துகொண்டு சமகால அரசியல் தொடர்பில் உரையாற்றினார்.
ஏறாவூர் பிரதேசத்திலுள்ள 14 வட்டாரங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட வட்டாரக்குழு உறுப்பினர்கள் 400பேர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். இதன்போது உலமாக்கள், கல்விமான்கள், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஏறாவூர் மத்திய குழு உறுப்பினர்கள், மசூறாக்குழு உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

0 comments:
Post a Comment