31ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவின் மெய்வல்லுனர் போட்டியில், 20வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கான முப்பாய்ச்சல் நிகழ்ச்சியில் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஏ.எம்.எம்.றிஸ்வான் வெண்கலப்பதக்கத்தைப் பெற்று அட்டாளைச்சேனை பிரதேசத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.
விளையாட்டுப் பயிற்றுவிப்பாளரும், அட்டாளைச்சேனை அல் நஜா விளையாட்டுக் கழகத்தின் மெய்வல்லுநர் பயிற்றுவிப்பாளருமான றிஸ்வானுக்கு அல் நஜா விளையாட்டுக்கழத்தினால் அட்டாளைச்சேனையில் அண்மையில் (5) பெரும் வரவேற்பளிக்கப்பட்டது.
அல் நஜா விளையாட்டுக் கழகத்தின் தலைவர் எஸ்.இத்ரீஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கழகத்தின் செயலாளர் ஏ.ஆர்.எம்.றிம்சான், பொருளாளர் ஏ.எல்.றிம்சான் உள்ளிட்ட கழகத்தின் முக்கியஸ்தர்கள், உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்
0 comments:
Post a Comment