அக்கரைப்பற்று மாநகரம் தேசியக் கொடியால் அழகுபடுத்தப்பட்டும், அக்கரைப்பற்றில் உள்ள அனைத்து அரச மற்றும் தனியார் நிறுவனங்களிலும் தேசியக் கொடி பறக்கவிடப்பட்டும், விழா நடைபெறும் Water Park அலங்கரிக்கப்பட்டும் காணப்பட்டது.
மும் மதங்களின் தலைவர்களின் ஆசியுரையுடனும், நாட்டுக்காக உயிர் நீத்த முப்படையினருக்கும் மற்றும் மூவின மக்களின் தலைவர்களுக்கும் இரண்டு நிமிடம் மௌன பிரார்த்தனையும் இடம்பெற்றது. அத்துடன், பாடசாலை மாணவர்களின் அணிவகுப்பும் இடம்பெற்று தேசிய மட்ட சுதந்திர தின நிகழ்வுக்கு நிகராக இந்நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இச்சுதந்திர தின விழாவில் தேசிய காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா கலந்து கொண்டு, தேசியக் கொடியினை ஏற்றி நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார். அத்துடன் சுதந்திர தின உரையினையும் அவர் நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில், உள்ளுராட்சிமன்ற தலைவர்கள், உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள், அக்கரைப்பற்றிலுள்ள அனைத்து அரச, தனியார் நிறுவனங்களின் பிரதானிகள், பொலிஸ், முப்படை உயர் அதிகாரிகள், வர்த்தகர்கள் இளைஞர் அமைப்புக்கள், விளையாட்டு கழகங்கள், பொது நிறுவனங்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள், பொது மக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

0 comments:
Post a Comment