சம்மாந்துறை பிரதேச ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாலர்கள் நேற்று (18) அமைப்பாளர் ஹசன் அலியை அவரது காரியாலயத்தில் சந்தித்து கலந்துரையாடிய போது அவர் மேற்கன்டவாறு தெரிவித்தார்.
அவர், மேலும் தெரிவிக்கையில்,
சமார் 80ஆயிரத்திற்கும் அதிகாமான மக்கள் வாழும் சம்மாந்துறைப் பிரதேசத்தில் ஒரே ஒரு ஆதார வைத்தியசாலை உட்பட அரச மற்றும் சில தனியார் வைத்தியசாலைகளும் காணப்படுகிறது. இவ்வைத்தியசாலைகளுக்கு சம்மாந்துறை தொகுதியிலுள்ள சம்மாந்துறை, இறக்காமம், நாவிதன்வெளி, ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் வாழும் மக்கள் சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ள வருகை தருகின்றனர்
குறிப்பாக நாளாந்தம் மேற்படி வைத்தியசாலைகளுக்கு சிகிச்சைகளுக்காக வருகை தரும் மக்கள் தமக்கு தேவையான முக்கியமானதும், மேலதிகமானதுமான மருந்துகளை பெற்றுக்கொள்ளும் வசதிகள் சம்மாந்துறை பிரதேசத்தில் இல்லை. குறித்த மருந்துகளை கொள்வனவு செய்வதற்காக பல தூரப் பிரதேசங்களுக்கே மக்கள் செல்ல வேண்டியுள்ளது. இதனால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இவ்வாறான சூழ்நிலையில், அண்மையில் கிழக்கு மாாகணத்தில் ஓசுசல மருந்தகங்கள் பல திறக்கப்பட்ட போதிலும் சம்மாந்துறை பிரதேசம் புறக்கனிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து சம்மாந்துறை பிரதேச மக்கள் தமது கவலையினை வெளியிட்டிருந்தனர். இந்த விடயத்தினை கவனத்திற்கொண்டு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவை சந்தித்து சம்மாந்துறை பிரதேசத்தில் ஓசுசல மருந்தகம் ஒன்றினை அமைத்து தருமாறு கோரிக்கை விடுத்தேன்.
குறித்த கோரிக்கையினை ஏற்றுக்கொண்ட அமைச்சர் அதனை உடனடியாக செய்து தருவதாகவும் வாக்குறுதியளித்தார். அத்துடன் சம்மாந்துறை பிரதேசத்தில் ஒசுசல மருந்தகமொன்றை அமைப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன் பிரகாரம் அதற்குரிய பொருத்தமான இடத்தினை அடையாளம் காண்பதற்காக அரச மருந்தகங்கள் கூட்டுத்தாபனத்தின் பிரதிநிதிகள் சம்மாந்துறை பிரதேசத்திற்கு விஜயம் செய்து இடத்தினையும் பார்வையிட்டுச் சென்றுள்ளனர்.
குறித்த மருந்தகம் சம்மாந்துறை பிரதேசத்தில் அமையப்பெற்றதும், பாதுகாப்பானதும், பயனுள்ளதுமான உயர்தர மருந்து வகைகளை குறைந்த விலையில் எதுவித அசௌகரிகமுமின்றி மக்கள் பெற்றுக்கொள்ள முடியும். இதனால் சம்மாந்துறை தொகுதியிலுள்ள மற்றும் அதனை அன்டியுள்ள பிரதேசங்களின் சுமார் 2இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் நன்மையடையவுள்ளனர். இந்த மருந்தகம் சம்மாந்துறை தொகுதி மக்களுக்கு கிடைத்த பெரும் வரப்பிரசாதமாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அரச மருந்தகங்கள் கூட்டுத்தாபன ஒசுசல மருந்தகத்தினை சம்மாந்துறையில் திறப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வரும் அமைப்பாளர் ஹசன் அலி மற்றும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன ஆகியோருக்கு சம்மாந்துறை பிரதேச மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

0 comments:
Post a Comment