மடக்கும்புர ஆசிரியர் இரா.ஜெயபிரகாஸின் “தலைப் பிரசவம்” கவிதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா (24) ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை விரிவுரையாளர் எம்.எச்.அன்வர் சதாத்தின் தலைமையில் அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் ஆசுகவி அன்புடீன் பிரதம அதிதியாகவும், வை.எம்.எம்.ஏ. இன் தேசிய உதவிச் செயலாளர் எம்.ஐ.உதுமாலெவ்வை கௌரவ அதிதியாகவும், அதிபரும், ஊடகவியலாளருமான எம்.ஐ.எம்.றியாஸ், ஊடகவியலாளர் ரீ.கே.றஹ்மத்துல்லா ஆகியோர் விஷேட அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர்.
இதன்போது அதிதிகளுக்கு “தலைப் பிரசவம்” கவிதைத் தொகுப்பு நூலினை மடக்கும்புர ஆசிரியர் இரா.ஜெயபிரகாஸ் வழங்கி வைத்தார்.மேலும் இந்நிகழ்வில் பல ஆசிரியர்களும், கல்விமான்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment