முகநூலில் எவருடைய தயவு தாட்சமுமின்றி தமது எழுத்தாற்றலை தத்ரூபமாக சான்றுப்படுத்தும் வகையில் வைத்திய கலாநிதி நாகூர் ஆரிப் எழுதிய ''முகநூலில் நான்'' எனும் பல்சுவை நூல் வெளியிட்டு நிகழ்வு இன்று (27) புதன்கிழமை மாளிகைக்காடு றிபா மண்டப கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
பிறைட் பியுச்ச பவுண்டேஷனின் வெளியீட்டில் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி றமீஸ் அபூவக்கர் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் நூலாசிரியர் வைத்திய கலாநிதி நாகூர் ஆரிப் நூலின் முதற் பிரதியினை நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்து கொண்ட கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் எம்.வை.சலீம் அவர்களுக்கு வழங்கி வைத்து நூலினை வெளியிட்டு வைத்தார்.
நூல் பற்றிய நோக்கினையும் விமர்சனத்தையும் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் தமிழ் மொழித்துறை தலைவர் பேராசிரியர் றமீஸ் அப்துல்லா நிகழ்த்த, நூலின் ஆய்வினை நூல் விமர்சகர் ஆசிரிய ஆலோசகர் எஸ்.எல்.மன்சூர் ஆகியோர் நிகழ்த்தினர்.
கௌரவ அதிதிகளாக கல்முனை பிராந்திய மின் பொறியியலாளர் பர்ஹான் றசீட், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஏ.எல்.அலாவுதீன் ஆகியோர் கலந்து கொண்டதோடு மாநகரசபை உறுப்பினர்கள் கல்வியாளர்கள், புத்திஜீவிகள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், கல்விமான்கள், பாடசாலை அதிபர்கள், ஊடகவியலாளர்கள், நண்பர்கள், குடும்பத்தினர், சமூக சிந்தனையாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
அதனை தொடர்ந்து நிகழ்வின் அதிதிகளினால் நூலின் பிரதிகள் நிழ்வில் கலந்து கொண்டோருக்கு வழங்கி வைக்கப்பட்டன.
0 comments:
Post a Comment