அட்டாளைச்சேனை விஸ்டம் இளைஞர் கழகம் நடாத்திய மாபெரும் மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டியில் அட்டாளைச்சேனை பிளக் நைட் விளையாட்டுக் கழகம் வெற்றிபெற்று சம்பியன் கிண்ணத்தை தனதாக்கிக்கொண்டது.
விஸ்டம் இளைஞர் கழகத்தின் 20வது வருட பூர்த்தியினை முன்னிட்டு நடாத்தப்பட்ட அணிக்கு 7பேர் கொண்ட 5ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட இக்கிரிக்கட் சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டி நேற்று (22) கடற்கரை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
இறுதிப்போட்டியில் அட்டாளைச்சேனை பிளக் நைட் மற்றும் ஒலுவில் நைட் ரைடர் ஆகிய கழக அணிகள் மோதிக்கொண்டன.
இதன்போது முதலில் துடுப்பெடுத்தாடிய பிளக் நைட் அணியினர் நிர்ணயிக்கப்பட்ட 5ஓவர்கள் முடிவில் 2விக்கட்டுக்களை இழந்து 53ஓட்டங்களைப் பெற்றனர். அந்த அணிக்காக றிபா 16ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
54ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய நைட் ரைடர் அணியினர் 5ஓவர்கள் நிறைவில் 3விக்கட்டுக்களை இழந்து 25ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவிக்கொண்டனர்.
இறுதிப்போட்டியின் சிறப்பாட்டக்காரராக பிளக் நைட் அணியின் றிபா தெரிவு செய்யப்பட்டார். அத்துடன் இத்தொடரின் சிறப்பாட்டக்காரராக அதே அணியைச் சேர்ந்த அஸ்லம் தெரிவு செய்யப்பட்டார்.
இறுதிப் போட்டி பரிசளிப்பு நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் பிரதி தவிசாளர் எம்.எஸ்.எம்.ஜஃபர் பிரதம அதிதியாகவும், விளையாட்டு உத்தியோகத்தர் ஏ.எல்.எம்.றசீன், கிராம உத்தியோகத்தர் அஸ்லம் ஸஜா ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர்.
இக்கிரிக்கட் சுற்றுப்போட்டியில் அட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ள 14 முன்ன்னி கழகங்கள் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment