பிரதான செய்திகள்

இரண்டாம் உலகப்போரில் மூழ்கிய பிரித்தானிய கப்பலை மீட்ட இலங்கை கடற்படை

இரண்டாம் உலக மகா யுத்தத்தின் போது, திருகோணமலை துறைமுகத்தை அண்பித்த கடற்பரப்பில் மூழ்கடிக்கப்பட்ட ‘சகயின்’ என்ற கப்பல், இலங்கை கடற்படையின் தொழில் நிபுணத்துவத்தின் கீழ், மீளவும் எடுக்கப்பட்டுள்ளது என கடற்படை அறிவித்துள்ளது. 

பிரித்தானியாவுக்குச் சொந்தமான மேற்படி ‘சகயின்’ என்ற கப்பல் 75 வருடங்களுக்குப் பின்னர், மீள எடுப்பதற்கு, இலங்கை கடற்படையின் சுழியோடி பிரிவுக்கு முடிந்துள்ளது என்றும் கடற்படை அறிவித்துள்ளது.

138 மீற்றர் நீளமான இந்தக் கப்பல், பயணிகள் மற்றும் பொருட்களை ஏற்றியிறக்குவதற்காக பயன்படுத்தப்பட்டது. அது தனது முதலாவது சேவையை 1924 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 24 ஆம் திகதியன்று ஆரம்பித்தது. 

மேற்படி கப்பல் திருகோணமலை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த நிலையில், 1924 ​ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 09ஆம் திகதியன்று, ஜப்பான் விமானப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதல்களுக்கு இலக்காகி மூழ்கிவிட்டது. 

அந்தக் கப்பலுக்கு ஏற்பட்டிருந்த பாரிய சேதங்களை கவனத்தில் கொண்டு, அக்கப்பல் கைவிடப்பட்டது. என்றாலும் இறங்கு துறையாக பயன்படுத்துவதற்காக, இந்தக் கப்பலானது 1943 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 24 ஆம் திகதியன்று முழுமையாக மூழ்கடிக்கப்பட்டது என்றும் இலங்கை கடற்படை விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

திருகோணமலை துறைமுகத்தை இலகுவாக விரிவாக்கம் செய்வதற்கு தேவையை கவனத்தில் கொண்டு, 35 அடி ஆழத்தில் மூழ்கிக்கிடந்த அந்தக் கப்பலை மீள எடுப்பதற்கான நடவடிக்கையை இலங்கை கடற்படை 2017 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாம் 11 ஆம் திகதியன்று ஆரம்பித்திருந்தது. 

கடற்ப​டையினரின் அர்ப்பணிப்பு மற்றும் தைரியம் ஆகியனவற்றினால் 05 மாதங்கள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட நடைவடிக்கையின் மூலமாக, கடந்த மார்ச் மாதம் 22 ஆம் திகதியன்று அந்தக் கப்பல், கடலுக்கு மேல் தென்பட்டது.

இதற்கான நடவடிக்கையில் இலங்கை கடற்படையைச் சேர்ந்த அதிகாரிகள் உள்ளிட்ட 98 பேர் பங்கேற்றிருந்தனர் என்றும் கடற்படை ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. 
 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment