”ஐக்கியமே பாக்கியம்” எனும் தொனிப்பொருளில் கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் ஸாஹிரா வரலாற்று சிறப்பு மிக்க நடைபவனி நேற்று (14) பாடசாலை முதல்வர் முஹம்மட் தலைமையில் இடம்பெற்றது.
முன்னாள் அதிபர் சட்டத்தரணி எம்.சீ. ஆதம்பாவா மற்றும் ஆயிரக்கணக்கான பழைய மாணவர்கள் பங்கேற்புடன் இடம்பெற்ற இந்த நடைபவனி பாடசாலை வளாகத்தில் ஆரம்பித்து பிரதான வீதி ஊடாக மாளிகைக்காடு சந்தி வரை சென்று மீண்டும் கல்முனை மாநகரம் வரை சென்றதுடன் மீண்டும் பாடசாலையை வந்தடைந்தது.
இதில் பழைய மாணவர்களை ஒன்றிணைத்தல், ஸாஹிறா ஒலிம்பிக் இல்ல விளையாட்டுப் போட்டியினை அறிமுகம் செய்தலும் பிரபல்யப் படுத்தலும், பாடசாலைக்கான வாகனம் ஒன்றை கொள்வனவு செய்வதற்கான முன்மொழிவினை முன்னெடுத்தல் என்ற நோக்கங்களை நிறைவேற்றுவதற்காகவும், கல்முனை ஸாஹிறாக் கல்லாரியை உலகறியச் செய்வதற்காகவும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment