இதனைக் கண்டித்து அப்பிரதேச விவசாயிகள் இன்று (08) வீதியினை மறித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.
பாலமுனை பிரதான வீதியிலிருந்து செல்லும் அரசயடி விவசாய பாதையானது. 50 வருடங்கள் பழமை வாய்ந்ததாகக் காணப்படுவதுடன் ஹிறாநகா், அஸ்ரப் நகா் மற்றும் தீகவாபி ஆகிய கிராமங்களுக்கும் நாளாந்தம் அதிகளவில் பயணிகள் போக்கு வரத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் அழிக்காதே அழிக்காதே விவசாயிகளின் பாதையை அழிக்காதே, விவசாயிகளின் முதுகெழும்பை பாதுகாப்போம், நிறுத்து நிறுத்து கனரக வாகனங்களை நிறுத்து, RDD அதிகாரிகளே ஏழை விவசாயிகளை காப்பாற்று, மண் வளத்தை பாதுகாத்து விவசாயத்தை ஊக்குவிப்போம், எனும் பதாதைகளை ஏந்திய வன்னம் நின்றனர்.



0 comments:
Post a Comment