இதன்போது அக்கரைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.றாசீக், அட்டாளைசை்சேனை பிரதேச சபையின் உப தவிசாளர் எம்.எஸ்.எம்.ஜஃபர், அக்கரைப்பற்று பிரதேச சபையின் செயலாளர் ஏ.எம்.ஹபிறு றகுமான் உட்பட உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் கலந்துகொண்டு அறுவடை மேற்கொண்டனர்.
இரசாயனங்களும், பீடைநாசினிகளும் பயன்படுத்தாமல் நஞ்சற்ற உணவினை உற்பத்தி செய்வதற்கு அரசாங்கமும், விவசாய திணைக்களமும் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.
மேற்படி கருத்திட்டத்திற்கமைவாகவே அக்கரைப்பற்று பிரதேச சபை வளாகத்தில் அதன் ஊழியர்களினால் தக்காளி, கத்தரி, மிளகாய் என்பன பயிரிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


0 comments:
Post a Comment