அட்டாளைச்சேனை பிரதேச சபை அமர்வு தமிழ் மொழியில் மாத்திரம் இடம்பெறுவதால் அந்த சபை அமர்வின் போது பேசப்படுகின்ற விடயங்களை தன்னால் புரிந்துகொள்ள முடியாமலுள்ளது எனவும், அடுத்த அமர்வின்போது மொழி பெயர்ப்பிற்கான நடவடிக்கைகளை தவிசாளர் மேற்கொள்ள வேண்டும் எனவும் பிரதேச சபை உறுப்பினர் தமேரோ குமாரி தெரிவித்தார்.
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் விசேட அமர்வு தவிசாளர் ஏ.எல்.அமானுல்லாஹ் தலைமையில் இன்று (24) பிரதேச சபையின் சபா மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நான் சிங்கள மொழி தெரிந்தவராக இருப்பதால் சபை நடவடிக்கைகளின் போது பேசப்படுகின்ற விடயங்களை தன்னால் புரிந்துகொள்ள முடியாமலுள்ளது. தயவு செய்து அடுத்த அமர்வில் மொழி பெயர்ப்பிற்கான வசதிகளை தவிசாளர் ஏற்படுத்தி தரவேண்டும்.
அத்துடன் இந்த சபையிலே நியமிக்கப்படுகின்ற குழுக்களில் பெண் உறுப்பினர்களையும் உள்வாங்க வேண்டும் எனவும் தெரிவித்தார். இதன் போது தவிசாளர் குறிப்பிட்ட விடயங்களை ஏற்றுக் கொண்டு செயற்படுவதாக அறிவித்தார்.

0 comments:
Post a Comment