பிரதான செய்திகள்

அதிகார வகையறைகளை துறந்து விடுதலையை நோக்கி மக்களை அழைக்கும் பணியை தேசிய காங்கிரஸ் மேற்கொள்கிறது

(அஸ்மி அப்துல் கபூர்)

அதிகாரம் கோரல் எனும் விளிம்பு நிலை அரசியலை விட சமுக நலன் சார் அரசியலை தேசிய காங்கிரஸ் அறிமுகம் செய்து வைத்திருக்கிறது. இன்று நேற்றல்ல தொடராக தேசிய காங்கிரஸ் கட்சியின் கொள்கை இதுவாகதான் இருக்கிறது. ஆனால் இவை  பிரதேசவாத, உணர்ச்சியூட்டும் அரசியலால் மூடி மறைக்கப்பட்டு கடந்த காலங்களில் அரசியல் முகவர்களால் தவறாக வழி நடாத்தப்பட்டிருந்தது, இன்று மிக தெளிவான முறையில் மக்கள் மன்றில் வெளிப்படுத்த பட்டிருக்கிறது.

தலைவர் அஷ்ரப் மறைந்த கையோடு ரவூப் ஹக்கீம் தலைவராக இருந்து முஸ்லீம்களின் தனித்துவ கட்சியை நோர்வே அரசுக்கும், ரணிலுக்கும் அடகு வைத்து சமுகத்தை இனமல்ல குழு என கையெழுத்திட்ட கசப்பான  வரலாற்று தவறிலிருந்து சமுகத்தை மீட்க கட்சியின் தவிசாளர் பதவியையும், சொகுசான அரசியல் பயணத்தையும் துறந்து மக்களிடம் உண்மையை உரைத்து மிக கடினமான சூழலில் அரசியல் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

01. ரணிலுடைய ஆட்சிக்கெதிராக போராடி சுதந்திர கட்சியின் ஆட்சியை சந்திரிகா பண்டாரநாயக காலத்தில் உருவாக்கியமை

02. மகிந்த ராஜபக்சவின் காலத்தில் வடக்கு கிழக்கு மாகாணத்தில் ஆயுதம் தாங்கிய புலிகளுக்கெதிராக குரல் கொடுத்து முஸ்லீம் சமுகத்தை சூழ்ந்திருந்த மிக கொடிய யுத்தத்தையும்  இணைந்த தற்காலிக வடக்கு கிழக்கு மாகாணங்களை வேறாக்கி சுதந்திர கிழக்கை உருவாக்க மிக கொடுரமான ஆயுத தாரிகளுக்கு முன் துணிச்சலாக குரல் எழுப்பினார். வென்று காட்டினார்...

ஆனால் அம்பாரை மாவட்டத்தில் பிரதேச வாத சிந்தனையை உருவாக்கி வெற்று அபிவிருத்திகளை முன் நிறுத்தி தேசிய காங்கிரஸ் கட்சியின் அரசியலை முடக்கும் பணியை உரிமைக்கான கட்சியாக தங்களை நிலைநிறுத்த வேண்டிய மு.கா. செய்துகொண்டிருந்தது.

03.பொதுபலசேனா ஏனைய இனவாத அமைப்புகள் தொடர்பில் அரசியல் தலைவர் என்கின்ற ரீதியில் மக்களுக்கு உண்மை உரைத்து தனது பாராளுமன்ற உருப்புரிமையை 2015 இழந்தார். அவை நிதர்சனமான உண்மைகளாக வெளிவந்து முஸ்லீம் சமுகம் மிக கடுமையான நெருக்கடிக்குள் சிக்குண்டு கிடைப்பதை அனைவரும்  அவதானித்தவர்களாக செய்வதறியாது  நமது  தலைவர்கள் என்கின்ற  முகவர்கள் நாளுக்கு  நாள் தமது கருத்துக்களை மாற்றி கொண்டு செல்வதை அவதானிக்க கூடியதாக இருக்கிறது.

04. தேசிய காங்கிரஸ் மிக தெளிவாக சந்திரிகா பண்டாரநாயக தலைமையிலான சுதந்திர கட்சியுடனும்,
மகிந்த ராஜபக்சவுடனும் அதன் பின் பொது வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற மைதிரிபால சிறிசேனா பின்னர் சுதந்திர கட்சி தலைமை ஏற்று அந்த கூட்டில் அங்கம் வகித்திருக்கிறதே தவிர ரணிலின் அரசாங்க குழுவில் ஒரு போதும் தேசிய காங்கிரஸ் பயணிக்கப் போவதில்லை,

ஆனால் ரணிலை ஆதரித்து சரத் பொன்சேகாவை  ஆதரித்து மகிந்தவிடம் அமைச்சு பதவிகளுக்காக வந்து சேர்ந்த முஸ்லீம் தலைமைகள் மீண்டும் உள்ளூர் அதிகாரங்களை பெற மொட்டு என வசைபாடிய மகிந்த ராஜபக்சவினுடைய கட்சியாக இருந்தாலும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மிக சிறுபாண்மை பிரதேசங்களில் அவர்கள் இருந்தாலும் அங்கு அதிகாரம் வழங்க முற்படும் வேளை தேசிய காங்கிரஸ் மிக கவனமாக நிதானித்திருக்கிறது.

கடந்த காலங்களில்  மகிந்தவையும் கட்சியையும் இனவாதிகள்  எனவும் பள்ளி உடைக்கிறார்கள் எனவும் கூவி திரிந்த முகவர்கள் அதிகாரத்துக்காக மக்களை முட்டாள்களாக்கியது நாம் தான் என பகிரங்கமாகவே ஏற்று கொண்டிருக்கிறார்கள் என சமுகம் உணர வேண்டும்.

தேசிய காங்கிரஸ் மிக கவனமாக சூழ்ச்சிகரமான  சூழலை கையாளுகிறது. மிக அநுபவம் வாய்ந்த சமுகம் தொடர்பான பிரஞ்சை உள்ள தலைமைதுவத்தினால் வழி நடாத்தப்படுகிறது. முஸ்லீம் மக்கள் ஒற்றுமை பட்டு வெற்றி கொள்ள இலக்குகளை தேசிய காங்கிரஸ் கட்சியின் கரங்களை பலப்படுத்துவதன் ஊடாக அடைந்து கொள்ள தயாராக வேண்டியது காலத்தின் தேவையாகும்.
 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment