கடந்த இரு தினங்களுக்கு முன்னர் திருப்பதியில் இருந்து ஹைதராபாத்கு இண்டிகோ விமானம் இரவு 8.55 மணி அளவில் புறப்பட்டது. இந்த விமானத்தில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் எம்.எல்.ஏ நடிகை ரோஜா உட்பட 72 பயணிகள் பயணித்தனர்.
இந்த விமானம் இரவு 10.25 மணிக்கு, ஹைதராபாத் ராஜிவ்காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. அப்போது, விமானத்தின் ஒரு டயர் திடீரென தீ பிடித்து வெடித்து சிதறியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதனால், விமானத்தில் இருந்த பயணிகள் பதற்றம் அடைந்துள்ளனர். விமானத்தின் டயர் வெடித்துத் தீ பிடித்ததை அடுத்து, தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
விமானத்தின் டயர் வெடித்ததால் ஓடுதளம் மூடப்பட்டு, ஹைதராபாத் சென்ற 6 விமானங்கள் சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கம் செய்யப்பட்டது.
இந்த விமான விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நடிகை ரோஜா, சகப் பயணிகளுடன் உயிர் தப்பிய தருணத்தை வீடியோ காட்சியாகப் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ காட்சி இணையதளத்தில் வெளியாகி உள்ளது.
0 comments:
Post a Comment