மன்னார் மாவட்ட வளர் பிரை பெண்கள் திட்ட பொறுப்பதிகாரி ரி.மேரி பிரியங்கா தலைமையில் மன்னார் பொது வைத்தியசாலைக்கு முன் ஆரம்பமான குறித்த ஊர்வலம் பிரதான வீதியூடாக சென்று மன்னார் பனங்கட்டுக்கொட்டு சிகையலங்கரிப்பாளர் கூட்டுறவுச்சங்க மண்டபத்தை சென்றடைந்தது.
குறித்த ஊர்வலத்தில் கலந்து கொண்ட பெண்கள் பல்வேறு பதாதைகளை ஏந்தியவாறு கலந்து கொண்டனர். குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் பெண்கள் எதிர் நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு கலந்து கொண்டிருந்தனர்.
ஊர்வலத்தை தொடர்ந்து மன்னார் பனங்கட்டுக்கொட்டு சிகையலங்கரிப்பாளர் கூட்டுறவுச்சங்க மண்டபத்தில் பல நிகழ்வுகளும் இடம்பெற்றது.
0 comments:
Post a Comment