முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட அரிப்பு, சிலாபத்துறை பிரதான வீதி அல்லிராணிக்கோட்டைக்கு முன்பாக இன்று (6) காலை சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்று திடீர் என தீப்பற்றி எறிந்துள்ளது.
முச்சக்கர வண்டியின் உரிமையாளர் குறித்த முச்சக்கர வண்டியை செலுத்திக்கொண்டு சென்ற போதே திடீர் என தீப்பற்றியதாக தெரியவருகின்றது.
குறித்த முச்சக்கர வண்டியை செலுத்திச் சென்றவர் முச்சக்கர வண்டியில் இருந்து தப்பியுள்ளார். எனினும் குறித்த முச்சக்கர வண்டி முழுமையாக தீயில் எறிந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த சிலாபத்துறை பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்
0 comments:
Post a Comment