பிரதான செய்திகள்

கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவிற்கு புதிய தலைவர் நியமனம்

கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் தலைவராக முன்னாள் அம்பாறை மேல் நீதிமன்றத்தின் நீதவானும், மேல் முறையீட்டு நீதிமன்றத்தின் நீதவானாக கடமையாற்றிய
நீதவான் சந்திர ஜெயதிலக்க இன்று (07) கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர்களின் நியமனங்களை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இரத்துச்செய்து புதிய நியமனங்களை வழங்குவதற்கு  கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம  நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதேவேளை தற்போது தலைவர் பதவி மற்றும்  உறுப்பினர் பதவிகளுக்கு நியமனம் வழங்கப்பட்டதுடன்  உறுப்பினராக கிழக்கு பல்கலை கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் பீ.டபிள்யூ.டி.சி.ஜயசிங்க நியமிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment