இவ் விளையாட்டு போட்டியில் 09 மாகாணங்களை சேர்ந்த 162 பாடசாலைகளின் 1458 மாணவர்கள் கலந்துக் கொண்டனர்.
கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்கள், கேடயங்கள் வழங்கும் நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.இராதாகிருஸ்ணன் பிரதம அதிதியாக கலந்துக் கொண்டார்.
இதன் போது வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள், கேடயங்கள் வழங்கி வைக்கபட்டன. இந் நிகழ்வில் கல்வி அமைச்சின் விளையாட்டு பிரிவிற்கு பொறுப்பான உயர் அதிகாரிகள், விளையாட்டு பயிற்றுவிப்பாளர்கள் எனப் பலர் கலந்துக்கொண்டனர்.


0 comments:
Post a Comment