பிரதான செய்திகள்

காத்தான்குடியிலும் ஹர்த்தால், கடையடைப்பு (படங்கள் இணைப்பு)

கண்டி மாவட்டத்தின் திகன, தெல்தெனிய உள்ளிட்ட பிரதேசங்களில் இடம்பெற்ற வன்முறைகளை அடுத்து, மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேசத்திலும் இன்று (06) பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது.

வங்கிகள் உட்பட அரச நிறுவனங்களும் மூடப்பட்டு காத்தான்குடி முழுதும் பூரண  ஹர்த்தால் அமுல் படுத்தப்பட்டுள்ள நிலையில் பாடசாலை  இயங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, பிரதான  வீதியில் டயரைப் போட்டு எரித்த நபரை இன்று (செவ்வாய்க்கிழமை) காலை கைது செய்திருப்பதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் காத்தான்குடியைச் சேர்ந்த ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வன்முறையைத் தூண்ட முற்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இக்கைது இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.





 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment