அக்கரைப்பற்று வலய பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்றுவரும் வலய மட்ட கரப்பந்தாட்டப் போட்டியின் 16வயது ஆண்கள் பிரிவில் ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலய அணியினர் வெற்றிபெற்று சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
வலய மட்ட கரப்பந்தாட்டப் போட்டியின் இறுதிப்போட்டி (20) அட்டாளைச்சேனை, தைக்காநகர் ஸஹ்றா வித்தியாலய மைதனத்தில் நடைபெற்றது.
இறுதிப்போட்டி அக்கரைப்பற்று அஸ்-சிராஜ் மகா வித்தியாலய அணியினருக்கும், ஒலுவில் அல்-ஹம்றா மகாவித்தியாலத்தியாலய அணியினருக்குமிடையில் நடைபெற்றது.
இதன்போது அல்-ஹம்றா மகா வித்தியாலய அணியினர் இரண்டு சுற்றுக்களிலும் 15-08 மற்றும் 15-10 ஆகிய புள்ளிகளைப் பெற்று வெற்றியினை தனதாக்கிக் கொண்டனர்.
வலய மட்ட கரப்பந்தாட்டப் போட்டியில் வெற்றிபெற்ற ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலய அணியினர் மாகாண மட்டத்திற்கு தெரிவாகியுள்ளனர்.

0 comments:
Post a Comment