பிரதான செய்திகள்

‘நஞ்சற்ற நாடு‘ வேலைத்திட்டத்தினை முன்னெடுத்து நாட்டு மக்களைப் பாதுகாப்போம்

(எப்.முபாரக்)
                                                               
இலங்கை நாடு முழுவதும் நஞ்சற்ற நாடு வேலைத்திட்டத்தினை அமுல்படுத்தி நாட்டில் இரசாயன செயற்பாடுகளை இல்லாதொழித்து நாட்டு மக்களை பாதுகாக்க வேண்டும் என நஞ்சற்ற நாடு தேசிய வேலைத்திட்டத்தின் தேசிய ஆலோசகர் பாராளுமன்ற உறுப்பினர் அதுரெலிய ரத்தினதேரர் தெரிவித்தார்.             

நஞ்சற்ற நாடு தேசிய வேலைத்திட்டத்தின் அறுவடை நிகழ்வும், விவசாயிகளை தெளிவுபத்தும் வேலைத்திட்டமும் இன்று (18) கந்தளாய் விவசாய விதை உற்பத்தி வளாகத்தில் நடைபெற்ற போது பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இதனைத் தெரிவித்தார்.                 

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்.

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய், சேருவில மற்றும் பதவிசிறிபுர பகுதிகளில் செய்கை பண்ணப்பட்ட விவசாய செயற்பாடுகள் மிகுந்த பலனை அழித்துள்ளது. கடந்த முப்பது வருடங்களாக புரையோடிப்போயிருந்த யுத்தத்தினை திருகோணமலை மாவிலாறு பகுதியில் ஆரம்பித்து யுத்தத்தினை முடிவுக்கு கொண்டு வந்தோம்.

இன்று கடந்த மூன்று வருடங்களாக நாட்டில் நஞ்சற்ற நாடு வேலைத்திட்டத்தினை ஆரம்பித்து சிறப்பாக மக்களை சென்றடைந்து வருகின்றது. அக்காலத்தினுள் என்பது வீதமான வேலைகள் நிறைவுபெற்றுள்ளது மிகுதியான வேலைகளை கூடிய விரைவில் நிறைவேற்றுவோம்.                         

நஞ்சற்ற நாடு வேலைத்திட்டம் தொடர்பாக திருகோணமலை மாவட்டத்தில் சமூர்த்தி உத்தியோகத்தர்கள் மூலம் சமூர்த்தி பயனாளிகளுக்கும், விவசாயிகளுக்கும் சேதனை பசளைகளை வழங்க உத்தேசித்துள்ளோம்.       

அடுத்த போக வேளாண்மையை மேற்கொள்ளுவதற்கிடையில் விவசாயிகளுக்கு வழங்கும் மாணியத்தினை வழங்க நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளோம். இம்மாவட்டத்தில் சிறந்த நஞ்சற்ற நாடு வேலைத்திட்டத்தினை மேற்கொள்ள அனைவரும் உறுதி பூணுவோம் என்றார்.
 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment