வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 3பெண்கள் மற்றும் 2ஆண்கள் உள்ளிட்ட 5பேர் கடும் காயங்களுக்குள்ளாகி, நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக, வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாவலப்பிட்டி பகுதியிலிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு தலவாக்கலை பகுதியை நோக்கி சென்ற தனியார் பஸ் ஒன்று பத்தனை மவுண்ட்வேர்ணன் பகுதியில் மண்மேடில் மோதி இவ்வாறு விபத்துக்குள்ளாகியது.
பிரதான வீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியதினால் நாவலப்பிட்டி தலவாக்கலை பிரதான வீதியின் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
பஸ்ஸில் திடீரென ஏற்பட்ட கோளாறு காரணமாக, பஸ்ஸை கட்டுபடுத்த முடியாமல் போனதால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக, திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

0 comments:
Post a Comment